News October 14, 2025
நாகை: தயார் நிலையில் 2500 மணல் மூட்டைகள்!

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருக்குவளை உட்கோட்டத்தில் நாகை கோட்டப்பொறியாளர் ராஜேஷ்கண்ணா அறிவுறுத்தலின் பேரில், 2,500 மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. உதவிக் கோட்டப் பொறியாளர் அய்யாதுரை, உதவிப்பொறியாளர் உமாமகேஸ்வரி தலைமையில் சாலை ஆய்வாளர்கள், பணியாளர்கள் இணைந்து பருவ மழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News November 10, 2025
நாகை மக்களே.. உடனடி தீர்வு வேண்டுமா?

நாகை மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர் , மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? <
News November 10, 2025
நாகையில் மானிய விலையில் மீன்பிடி வலை

நாகை மாவட்டத்தில் உள்நாட்டு மீனவர்களை ஊக்குவிக்கப்பட மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள உள்நாட்டு மீனவர்கள் மற்றும் மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு மீன்பிடி வலைகள், குளிர்காப்பு பெட்டி பொருத்தப்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் செயற்கை கோள் தொலைபேசி மானிய விலையில் வழங்கும் திட்டம் செயல்படுத்த உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News November 10, 2025
நாகை: கந்தூரி விழாவிற்கு 45 கிலோ சந்தன கட்டைகள் வழங்கல்

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் உள்ள உலகப் புகழ் பெற்ற தர்காவில் 469வது கந்தூரி விழா நவம்பர் 21ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கு வருடம் தோறும் அரசு சார்பில் 40 கிலோ சந்தன கட்டைகள் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த வருடம் 45 கிலோ சந்தனக்கட்டைகள் வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் ஆவடி நாசர் கூறியுள்ளார். மேலும் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.


