News September 29, 2025
நாகை: ட்ரோன்கள் பறக்க தடை

நாகை மாவட்டத்தில் ட்ரோன்கள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம், இந்திய அரசால் அறிவிக்கப்பட்ட ட்ரோன் விதிகள், 2021 படி மற்றும் பொது பாதுகாப்பு, சட்டம், ஒழுங்கு காரணங்களுக்காக மாவட்ட எல்லைக்குள் ஆட்சியரின் முன் அனுமதியின்றி பொதுமக்கள் கூடும் இடங்களில் ட்ரோன், மனிதர் இல்லா வானூர்தி இயக்கக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 10, 2025
நாகை: மக்கள் குறைதீர் கூட்டம்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வங்கிக் கடன், உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு மற்றும் கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 208 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
News November 10, 2025
நாகை மக்களே.. உடனடி தீர்வு வேண்டுமா?

நாகை மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர் , மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? <
News November 10, 2025
நாகையில் மானிய விலையில் மீன்பிடி வலை

நாகை மாவட்டத்தில் உள்நாட்டு மீனவர்களை ஊக்குவிக்கப்பட மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள உள்நாட்டு மீனவர்கள் மற்றும் மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு மீன்பிடி வலைகள், குளிர்காப்பு பெட்டி பொருத்தப்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் செயற்கை கோள் தொலைபேசி மானிய விலையில் வழங்கும் திட்டம் செயல்படுத்த உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.


