News October 10, 2025
நாகை: கடலில் மயங்கி விழுந்து பலி

நாகை மாவட்டம் நம்பியார் நகரை சேர்ந்த மீனவர் வீரையன் (52). இவர் கடலில் மீன்பிடிக்க சென்றபோது, திடீரென மயங்கி படகிலிருந்து கடலில் விழுந்துள்ளார். இதனை கண்ட சக மீனவர்கள் அவரை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுக்குறித்து நாகை கடற்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News November 13, 2025
நாகை: நகராட்சி ஆணையர் முக்கிய அறிவிப்பு

நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு, கொடி ஊர்வலம் மற்றும் சந்தனக்கூடு ஊர்வலம் புது பள்ளி தெருவில் தொடங்கி கடைவீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக நாகூர் செல்ல உள்ளது. எனவே ஊர்வலம் செல்லும் பகுதிகளில் உள்ள தற்காலிக பந்தல் விளம்பர தட்டிகள் மற்றும் ஊர்வலத்திற்கு இடையூறாக உள்ள அனைத்து ஆக்ரமிப்புகளையும் சம்பந்தப்பட்டவர்கள் அகற்றுமாறு நாகை நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
News November 13, 2025
நாகை: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <
News November 13, 2025
நாகை: மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு

நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம், வரும் 15ம் தேதி நடைபெற உள்ளது. இதில் புதிய அடையாள அட்டை விண்ணப்பித்தல், நலத்திட்ட உதவி மற்றும் உபகரணங்கள் பெறுதல் போன்ற பணிகள் நடைபெறும். எனவே, மாற்றுத்திறனாளிகள் அனைவரும் இதில் கலந்து கொண்டு ,அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


