News August 4, 2024
நாகை எம்.எல்.ஏவிடம் கோரிக்கை வைத்த தலைமையாசிரியர்

நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் அவர்களை நாகப்பட்டினம் மாவட்டம் சங்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் இரா.பாலு சந்தித்து பள்ளியில் திறன் வகுப்பறை (Smart Class) அமைக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். விரைவில் ஸ்மார்ட் கிளாஸ் அமைத்து தரப்படும் என எம்.எல்.ஏ உறுதி அளித்தார்.
Similar News
News January 15, 2026
நாகை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் 2026-27 ஆம் கல்வியாண்டில் புதிய தொழிற்பள்ளிகள் தொடங்க, அங்கீகாரம் புதுப்பிக்க, மற்றும் புதிய பிரிவுகளை ஆரம்பிக்க இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 28-ம் தேதியே கடைசி நாளாகும். எனவே விருப்பமுள்ளவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகலாம் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News January 15, 2026
நாகை: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு.. APPLY NOW!

நாகை மக்களே, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இதனை SHARE பண்ணுங்க.!
News January 15, 2026
நாகை: கணவன் அடித்தால் CALL பண்ணுங்க!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் கணவன் அடிப்பது, வரதட்சணை கேட்டு துன்புறுத்துவது போன்ற குடும்ப வன்முறைகளை நாகை மாவட்ட பெண்கள் யாரேனும் எதிர்கொண்டால், தயங்காமல் மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (8903392839) தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க!


