News October 10, 2025

நாகையில் நெல் கொள்முதல் ஆய்வு கூட்டம்

image

நாகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (அக்.10) உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நெல் கொள்முதல் நடவடிக்கைகள் பற்றிய ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், தமிழக மின் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் ஆகிய பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News November 13, 2025

நாகை: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <>eservices.tn.gov.in <<>>என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News November 13, 2025

நாகை: மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு

image

நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம், வரும் 15ம் தேதி நடைபெற உள்ளது. இதில் புதிய அடையாள அட்டை விண்ணப்பித்தல், நலத்திட்ட உதவி மற்றும் உபகரணங்கள் பெறுதல் போன்ற பணிகள் நடைபெறும். எனவே, மாற்றுத்திறனாளிகள் அனைவரும் இதில் கலந்து கொண்டு ,அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News November 13, 2025

நாகூர்: 100 சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு

image

நாகூரில் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்கா கந்தூரி விழா வருகிற 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 30-ம் தேதி சந்தனக்கூடு நிகழ்ச்சியுடன் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு நவ.21-ம் தேதி முதல் டிச.1-ஆம் தேதி வரை சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, சிதம்பரம், ராமநாதபுரம், தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய பகுதிகளில் இருந்து 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!