News August 19, 2025
நாகையில் இலவச பயிற்சி; ஆட்சியர் அறிவிப்பு!

நாகை மாவட்டத்தில் பொன்னி சித்திரக் கடல் ஓவிய பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இம்மயத்தில் இலவச ஓவிய பயிற்சியில் சேர நுழைத் தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், 13 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருகிற ஆக.23ம் தேதி நடைபெறும் இத்தேர்வுக்கு, 9003757531 என்ற எண்ணில் ஆக.22ம் தேதிக்குள் வாட்ஸ்அப்-யில் பதிவு செய்ய வேண்டும். மேலும் சந்தேகம் இருப்பின் அதே எண்ணுக்கு அழைக்கலாமென ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 11, 2025
நாகை: B.E படித்தவர்களுக்கு வேலை; தேர்வு இல்லை!

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் உள்ள திட்ட பொறியாளர், டெக்னிக்கல் நிபுணர் உள்ளிட்ட பதவிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 23
3. வயது: 21 – 33
4. சம்பளம்: ரூ.25,000 – ரூ.55.000
5. கல்வித்தகுதி: B.E
6. நேர்காணல் நாள்: 16.12.2025
7. மேலும் தகவலுக்கு <
8. மற்றவர்களும் பயன்பெற இதனை SHARE பண்ணுங்க.
News December 11, 2025
நாகை மீனவர்களுக்கு எச்சரிக்கை

வங்கக் கடலில் உருவாகி நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலில் காற்றின் வேகம் 45 முதல் 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். இதனால் நாகை மாவட்ட விசைப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற விசைப்படகு மீனவர்களும் விரைந்து கரைத்திரும்ப வேண்டும் என மீன்வளத்துறை எச்சரித்துள்ளது.
News December 11, 2025
நாகை: சரக்கு வாகனம் மோதி பரிதாப பலி

தஞ்சை மாவட்டம், சுவாமிமலையை சேர்ந்தவர் அலிஷேக் மன்சூர் (60). இவர் நேற்று தனது டூவீலரில் கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது திட்டச்சேரி அடுத்த குருவாடி அருகே எதிரே வந்த சரக்கு வாகனம் அலிஷேக் மன்சூரின் டூவீலர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த அவர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.


