News August 21, 2024
நாகர்கோவில் வந்தார் அமைச்சர் மதிவேந்தன்

தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேற்று நாகர்கோவில் வந்தார். நாகர்கோவில் ராமபுரம் அரசு விருந்தினர் மாளிகை வந்த அவரை தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், முன்னாள் எம்எல்ஏ ராஜன், திமுக துணை செயலாளர் பூதலிங்கம் பிள்ளை, மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா உட்பட பலர் வரவேற்றனர். பின்னர் அமைச்சர் மதிவேந்தன் அவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
Similar News
News January 20, 2026
குமரி: தரமற்ற உணவு விற்பனையா? உடனே CALL..

குமரியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளதால் அங்குள்ள உணவகங்களில் ஆய்வு செய்ய உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உணவகங்களில் சோதனை செய்து கெட்டுப்போன இறைச்சிகளை அழித்து அபராதம் விதித்தனர். இதையடுத்து ஹோட்டல்களில் தரமற்ற உணவு விற்பனை செய்தால் 94440-42322 என்ற WhatsApp எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE
News January 20, 2026
குமரி: NO EXAM.. ரூ.58,000 சம்பளத்தில் அரசு வேலை ரெடி!

தமிழ்நாடு சுகாதார துறையில் (TN MRB) காலியாக உள்ள 999 Nursing Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சம்பளம் ரூ.15,700 – ரூ.58,100 வரை வழங்கப்படும். இதற்கு 10th, Nursing Assistants course முடித்தவர்கள் பிப்.8க்குள் இங்கு <
News January 20, 2026
குமரி: SIR பெயர் சேர்க்க நீக்க 84,837 பேர் விண்ணப்பம்

குமரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கான கால அவகாசம் இம்மாதம் 30-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாவட்டத்தில் இதுவரையிலும் 84 ஆயிரத்து 837 பேர் தங்களின் பெயர் சேர்க்கவும், நீக்கவும், திருத்தம் செய்யவும் விண்ணப்பம் செய்துள்ளனர் என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் நேற்று (ஜன.19) தெரிவித்தனர்.


