News November 14, 2025

நாகர்கோவிலில் பொன்.ராதாகிருஷ்ணன் கைது

image

கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஜனதா சங்கத்தின் மீது அவதூறு பரப்பி வரும் அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் முத்துராமன் உட்பட நிர்வாகிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Similar News

News December 9, 2025

குமரி: சிறுமிக்கு பாலியல் தொல்லை.. முதியவருக்கு சிறை

image

நாகர்கோவில் சகாய நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (56) இவர் கடைக்கு சென்ற 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பெயரில் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் செல்வராஜ் மீது வழக்கு பதிவு செய்தனர். வழக்கை விசாரித்த மகிளா நீதிபதி தனசேகரன், செல்வராஜுக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும் 5,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

News December 9, 2025

குமரி: டிகிரி போதும்., தேர்வு இல்லாத SBI வங்கி வேலை!

image

குமரி மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 20 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.51,000 வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

News December 9, 2025

குமரி: ரூ.100 கோடி சுருட்டல்? போஸ்டர்களால் பரபரப்பு

image

குமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக ஜெயசுதர்ஷன் நியமிக்கப்பட்டு அவர் கட்சிப் பணி ஆற்றி வருகிறார். இந்நிலையில், தனியார் மருத்துவக் கல்லூரியில் போலி சான்றிதழ் தயாரித்து வழங்கிய வகையில் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஜெயசுதர்ஷன் 100 கோடி ரூபாய் சுருட்டியதாக சமூக நீதி மாணவர் பேரவை என்ற பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதனால், குமரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.

error: Content is protected !!