News May 3, 2024
நாகப்பட்டினம் : பூம்புகார் வரலாறு !!

காவேரிபூம்பட்டினமான பூம்புகார், முன்காலத்தில் சோழர்களின் துறைமுகப்பட்டினமாக இருந்தது. இந்த ஊர் காவிரி கடலுடன் சங்கமிக்கும் இடமாகும். இது குறித்து ஆய்வுகள் நடத்தப்படாமல் இருந்த நிலையில் கடந்தாண்டு நடத்தப்பட்ட ஆய்வில் பழைய பூம்புகார் நகரம் கடலுகுள் சென்றதாகவும், அதன் காலம் 15,000 ஆண்டுகளாகவும் இருக்கும் எனக் கண்டறியப்பட்டது. இதன் ஆய்வுகளில் மேலும் தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News November 14, 2025
நாகை: நாளை மின்தடை செய்யப்படும் இடங்கள்!

நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், மேமாத்தூர், கிடாரங்கொண்டான் உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் நாளை (நவ.15) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், அக்கரைப்பேட்டை, செம்பனார்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்கள்!
News November 14, 2025
நாகை: இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் நேற்று (நவ.13) இரவு 10 மணி முதல் இன்று(நவ.14) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
News November 13, 2025
நாகை: நகராட்சி ஆணையர் முக்கிய அறிவிப்பு

நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு, கொடி ஊர்வலம் மற்றும் சந்தனக்கூடு ஊர்வலம் புது பள்ளி தெருவில் தொடங்கி கடைவீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக நாகூர் செல்ல உள்ளது. எனவே ஊர்வலம் செல்லும் பகுதிகளில் உள்ள தற்காலிக பந்தல் விளம்பர தட்டிகள் மற்றும் ஊர்வலத்திற்கு இடையூறாக உள்ள அனைத்து ஆக்ரமிப்புகளையும் சம்பந்தப்பட்டவர்கள் அகற்றுமாறு நாகை நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.


