News September 29, 2025
நவராத்திரி விழாவில் புதுச்சேரி சபாநாயகர் பங்கேற்பு

புதுச்சேரி அருகே மொரட்டாண்டி டோல்கேட் அருகே எழுந்தருளியுள்ள ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற நவராத்திரி விழாவில், சட்டப்பேரவை தலைவர் செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். நவராத்திரி விழாவில் பரதமாடிய பரத கலைஞர்களுக்கு சட்டப்பேரவை தலைவர் செல்வம் நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.
Similar News
News November 7, 2025
புதுச்சேரி: வங்கி கணக்கை பாதுகாக்க இது முக்கியம்

உங்க வங்கி மறு KYC தேவை என உங்களுக்கு அறிவித்ததா? அப்போ, உங்கள் வங்கி கணக்கை முடக்காமல், செயல்பாட்டில் வைத்திருக்க உங்கள் KYC-ஐ புதுப்பிக்கவும்.
KYC எப்படி புதுப்பிப்பது:
*உங்கள் அருகிலுள்ள வங்கி கிளைக்கோ / கிராம பஞ்சாயத்து முகாமிற்கோ செல்லவும்.
*ஆதார், வோட்டர் ஐடி, 100நாள் வேலை அட்டை கொண்டு செல்லவும்.
*விவரங்களில் எந்தவிதமான மாற்றமும் இல்லையெனில் சுய அறிக்கை (Self-declaration) போதும். SHARE IT
News November 7, 2025
புதுச்சேரி: பொதுமக்கள் குறை தீர்வு முகாம் அறிவிப்பு

புதுச்சேரி டிஜிபி ஷாலினிசிங் உத்தரவின்படி புதுச்சேரிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில், (நவ.8) பொதுமக்கள் குறை தீர்வு முகாம் நடைபெறும் என புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் இன்று கலைவாணன் தெரிவித்துள்ளார். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளைப் புகார் மூலம் தெரிவிக்கலாம் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
News November 7, 2025
காரைக்கால்: மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு

புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் இருந்து காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு, பொது மக்களுக்கு வரும் சனிக்கிழமை (08.11.2025) அன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் புற்றுநோய் சம்பந்தமான சிறப்பு மருத்துவர்கள் குழு வருகை புரிய உள்ளதால், காரைக்கால் பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு, மாவட்ட நிர்வாகம் தங்களை கேட்டுக்கொள்கிறது.


