News November 19, 2025

நயன்தாராவிற்கு ₹10 கோடிக்கு Birthday பரிசு!

image

நயன்தாரா நேற்று 41-வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், அவருக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், அவரது கணவர் விக்னேஷ் சிவன் ரோல்ஸ் ராய்ஸ் காரை பிறந்த நாள் பரிசாக அளித்துள்ளார். இந்த காரின் விலை சுமார் ₹10 கோடி எனக்கூறப்படும் நிலையில், இது தொடர்பாக SM-ல் விக்னேஷ் சிவன் பதிவிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

Similar News

News January 17, 2026

துடைத்து எறியப்பட்ட காங்., மறுபரிசோதனை செய்யுமா?

image

மகாராஷ்டிர உள்ளாட்சி தேர்தலில் மும்பை, புனே, நாக்பூர் உள்ளிட்ட 25 மாநகராட்சிகள், 207 நகராட்சிகளை பாஜக கூட்டணி கைப்பற்றியுள்ளது. ஆனால், காங்., படுதோல்வியடைந்து துடைத்து எறியப்பட்டிருகிறது. இத்தேர்தல் முடிவு, காங்., கட்சியினர் தங்களை மறுபரிசோதனை செய்வதற்கான முக்கிய காலகட்டத்தில் இருப்பதை வெளிக்காட்டுவதாகவும், மக்கள் பிரச்னையை கையில் எடுத்து களமாட வேண்டும் எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

News January 17, 2026

திமுகவின் கோட்டையை குறிவைக்கும் பாஜக?

image

மறைந்த Ex CM கருணாநிதி முதன்முதலாக(1957) போட்டியிட்டு வென்ற தொகுதி குளித்தலை. அதன்பிறகு அது அதிமுகவின் கோட்டையாக மாறியது. ஆனால் 2016-ல் இருந்து அங்கு மீண்டும் தலைதூக்கியிருக்கிறது திமுக. இதனால், இம்முறை குளித்தலையில் திமுகவை தோற்கடித்தால் இமேஜ் கூடும் என்று நினைக்கிறதாம் பாஜக தலைமை. அத்தொகுதியை EPS-யிடம் கேட்க, அவரும் அதற்கு ஓகே சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது.

News January 17, 2026

PKV பிரபு திமுகவில் இணைந்தார்.. ஓபிஎஸ் அதிர்ச்சி

image

டெல்டா மாவட்டங்களில் அதிமுக முக்கிய முகங்களில் ஒருவராக வலம் வந்த வேதாரண்யம் PKV பிரபு உதயநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இவரது தாத்தா வெங்கடாசலம் காங்கிரஸில் EX MLA, மாநில துணை தலைவராக இருந்தவர். திமுகவில் இணைந்த பிரபு, அதிமுக(OPS அணி) மாநில அமைப்புச் செயலாளராக இருந்தவர். மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ் என அடுத்தடுத்து தனது ஆதரவாளர்கள் திமுகவில் இணைவது OPS-க்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

error: Content is protected !!