News June 19, 2024
நன்றி தெரிவித்த சேலம் நாடாளுமன்ற உறுப்பினர்

நடைபெற்று முடிந்த சேலம் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட டி.எம்.செல்வகணபதி வெற்றி பெற்றார். இதையடுத்து, இந்தியா கூட்டணி செயல் வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் சேலம் ஐந்து ரோடு தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்வில், செல்வகணபதி கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தார். உடன், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News January 20, 2026
சேலம் : பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். சேலம் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0427-2420011, தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441, Toll Free -1800 4252 441, சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126, உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756.(ஷேர் பண்ணுங்க)
News January 20, 2026
ஆட்டையாம்பட்டியில் கர்ப்பிணிக்கு நடந்த கொடூரம்!

சேலம் மாவட்டம் நைனாம்பட்டி அருகே வழித்தடப் பிரச்சினை காரணமாக, 7 மாத கர்ப்பிணியான தரண்யா என்பவரை பக்கத்து வீட்டைச் சேர்ந்த கணபதி என்பவர் கல்லால் வயிற்றில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த தரண்யா சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த ஆட்டையாம்பட்டி போலீசார் கோவிந்தராஜ் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரைக் கைது செய்துள்ளனர்.
News January 20, 2026
உளுந்து, பச்சைப்பயறுக்கு அரசு ஆதரவு விலை அறிவிப்பு

சேலம் மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள பச்சைப்பயறு மற்றும் உளுந்தை அரசு விலை ஆதரவு திட்டத்தின் கீழ் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விற்கலாம் என ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார். இதன்படி பச்சைப்பயறு கிலோ ரூ.87.68-க்கும், உளுந்து ரூ.78-க்கும் கொள்முதல் செய்யப்பட உள்ளது. விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது விளைபொருட்களை விற்பனை செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


