News August 24, 2024
தொடர் விடுமுறை: சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தொடர் விடுமுறையை முன்னிட்டு, கிளாம்பாக்கத்தில் இருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், தி.மலை ஆகிய ஊர்களுக்கு விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இன்று 165 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேலும், கோயம்பேட்டில் இருந்து வேலூர், ஓசூர், புதுச்சேரி ECR வழி, தி.மலைக்கு ஆற்காடு, ஆரணி, காஞ்சிபுரம், வந்தவாசி வழியாக இன்று 40 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
Similar News
News November 14, 2025
விழுப்புரம் காவலர்களுக்கு எஸ்பி பாராட்டு

விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு மது விலக்கு சோதனை சாவடி மற்றும் நெடுஞ்சாலை ரோந்து பிரிவில் சிறப்பாக பணி புரிந்த காவலர்களை இன்று (நவ.14) நேரில் அழைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் பாராட்டினார். கெங்காரம்பாளையம் சோதனை சாவடியில் பணியில் இருந்த தலைமை காவலர்கள்.குணசீலன், விஜயகுமார் மற்றும் காவலர் வினோத் ஆகியோர் புதுச்சேரி மில்லி சாராயம் பறிமுதல் செய்தனர்.
News November 14, 2025
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி ஆட்சியர் ஆய்வு

75 விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இராதாபுரம் கிராம நிர்வாக அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து ஆய்வு நடைபெற்றது. வாக்குச்சாவடி நிலை அலுவலர் செயலியில் (BLO APP) உள்ளீடு செய்யும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்,அவர்கள் இன்று (நவ.14) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
News November 14, 2025
மாரத்தான் ஓட்டத்தை துவக்கி வைத்த ஆட்சியர்

விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாக மைதானத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் 72-ஆவது அகில இந்திய கூட்டுறவு வார விழா கொண்டாடும் வகையில் இன்று (நவ.14) “மினி மாரத்தான்” போட்டியினை ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் விழுப்புரம் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் ஏ.விஜயசக்தி உட்பட பலர் உள்ளனர்.


