News April 2, 2025
தேவகோட்டை : நகைக்கடை உரிமையாளரை ஏமாற்றிய நபர்

தேவகோட்டையை சேர்ந்த சேகர்(38) வங்கியில் நகைகளை வைத்து ரூ.12,20,000 கடன்பெற்றுள்ளார். மதுரையை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் சிவக்குமாரை(47) சேகர் மற்றும் அவரது கூட்டாளிகள் சந்தித்து, நகைகளை திருப்பி, மீண்டும் வைத்து மீதம் உள்ள தொகையை மட்டும் திருப்பிதர பேசியுள்ளனர். சிவக்குமார் பணம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட சேகர் நகையை திருப்பாமல் தலைமறைவாகிய நிலையில் சேகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Similar News
News January 15, 2026
சிவகங்கை கொள்ளையர்களுக்கு 4 ஆண்டு கடுங்காவல்

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பிரபல கொள்ளையர்கள் இருவருக்கு தலா 4 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து, தஞ்சாவூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 04.07.2025 அன்று தஞ்சாவூரில் பகல் நேரத்தில் வீடு புகுந்து திருடிய வழக்கில் கைது செய்யப்பட்ட சுகுமார் (27), அமர்நாத் (32) ஆகியோருக்கு தலா ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
News January 15, 2026
சிவகங்கை : இ-ஸ்கூட்டர் ரூ. 20,000 மானியம் – APPLY LINK!

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க இங்கு <
News January 15, 2026
சிவகங்கை: இரண்டு நாட்கள் மது கடைகள் மூடல்

சிவகங்கை மாவட்டத்தில், 2 நாட்கள் மதுக்கடைகள் மூடல். வருகிற ஜன-16 திருவள்ளுவா் தினம், ஜன-26 குடியரசு தினம் ஆகிய இரு நாள்களில் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், அவற்றுடன் இணைந்து செயல்படும் மதுக் கூடங்கள், வெளிநாட்டு மது வகைகள் விற்பனை உரிமம் பெற்ற கிளப்புகள், உணவகங்கள், மது அருந்தும் கூடங்கள் முழுவதுமாக மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.


