News March 25, 2024
தேர்தல்: வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

தமிழகத்தில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று (மார்ச் 25) வேட்புமனு தாக்கல் செய்தனர். அதன்படி, வேலூர் எம்பி தொகுதியில் திமுகவின் கதிர் ஆனந்த், பாஜகவின் ஏ.சி.சண்முகம், அதிமுகவின் பசுபதி உள்ளிட்டோர் தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்புலட்சுமியிடம் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். அதில் பலர் நல்ல நேரம் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 27 கடைசி நாளாகும்.
Similar News
News November 12, 2025
வேலூர்: இருளில் மூழ்கிய புதிய பஸ் நிலையம்

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு பஸ்கள் செல்கின்றன. பஸ் நிலையத்தின் முன் பகுதியில் போதுமான அளவிற்கு மின் விளக்குகள் இல்லை. இதனால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே புதிய பஸ் நிலையத்தின் முன் பகுதியில் கூடுதல் மின் விளக்கு வசதி ஏற்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பஸ் டிரைவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
News November 12, 2025
வேலூர்: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

வேலூர் மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <
News November 12, 2025
வேலூர்: INOX-இல் சூப்பர் வேலை!

வேலூரில் இயங்கி வரும் செல்வம் ஸ்கொயரில் உள்ள PVR-INOX சினிமாவில் Operations Associate பணிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் அனுபவத்திற்கு ஏற்றாற்போல சம்பளம் வழங்கப்படும். இந்த பணிக்கு 40 வயதிற்குட்பட்ட ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் நவம்பர். 30ம் தேதிக்குள் இந்த <


