News April 17, 2024
தேர்தல் விழிப்புணர்வு நடைப்பயண பேரணி நிறைவு

தேனி மக்களவை பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் 100 கி.மீ. தேர்தல் விழிப்புணர்வு நடைப்பயண பேரணி நடைபெற்றது. இப்பேரணி அல்லிநகரம் நகராட்சியில் இன்றுடன் நிறைவு பெற்றது. மேலும் தேர்தல் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
Similar News
News November 8, 2025
தேனி: பட்டாவில் பெயர் மாற்ற ஒரே வழி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <
News November 8, 2025
தேனியில் 78 காலி பணியிடங்கள் – கலெக்டர் தகவல்

தேனி மாவட்டத்தில் 78 காலி பணியிடங்கள் 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. https://theni.nic.in என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம். ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனை, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகம், க.விலக்கு, தேனி- 625512 என்ற முகவரிக்கு 24.11.2025 அன்று மாலை 5 மணிக்குள் நேரிலோ/அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் என்றார்.
News November 8, 2025
தேனி: மயங்கி விழுந்த பெண் உயிரிழப்பு

ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் இந்திராணி (49). இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று (நவ.7) மாலை அவர் அப்பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் முன்பாக கோலம் போட்டுள்ளார். அப்பொழுது திடீரென மயங்கி விழுந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.


