News March 27, 2024
தேர்தல் திருவிழா அழைப்பிதழ்

கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் திருவிழாவில் வாக்காளர்கள் 100% வாக்குப்பதிவு செய்வதை வலியுறுத்தும் வகையில் அச்சடிக்கப்பட்டுள்ள தேர்தல் திருவிழா அழைப்பிதழ் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. திருமண அழைப்பிதழ் போன்று தற்போது தேர்தல் திருவிழா அழைப்பிதழ் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Similar News
News November 11, 2025
கள்ளக்குறிச்சியில் இன்று எங்கெல்லாம் மின் தடை?

கள்ளக்குறிச்சி: ஈருடையாம்பட்டு துணை மின் நிலையத்தில் நாளை(நவ.11) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், ஈருடையாம்பட்டு, அரும்பராம்பட்டு, ஆற்கவாடி, சுத்தமலை, ஆதனூர், மங்கலம், வடமாமந்தூர், பொரசப்பட்டு, மேல்சிறுவள்ளூர், சீர்பாதநல்லூர்,மணலூர்,அருளம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 11, 2025
கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (நவ.10) இரவு முதல் இன்று (நவ.11) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News November 10, 2025
மக்கள் குறைதீர் கூட்டத்தில் 433 மனுக்கள் பெறப்பட்டதாக அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (நவ.10) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 424 மனுக்களும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 9 மனுக்களும் என மொத்தமாக 433 மனுக்கள் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு உடனடி தீர்வு காண மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


