News April 10, 2024

தேர்தல் செலவின நடைமுறைகள் மற்றும் கண்காணிப்பு

image

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பாராளுமன்ற தேர்தலையொட்டி இன்று தேர்தல் செலவின நடைமுறைகள் மற்றும் கண்காணிப்பு தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாநில அளவிலான சிறப்பு தேர்தல் செலவின பார்வையாளர் பி.ஆர்.பாலகிருஷ்ணன் தலைமையில், திருவாரூர் தேர்தல் செலவின பார்வையாளர் வருண்சோனி, நாகை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், நாகை, திருவாரூர் எஸ்பிக்கள் உடன் இருந்தனர்,

Similar News

News November 11, 2025

நாகை: கடற்கரையில் கிடந்த பிணம்

image

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி கடற்கரையில் நேற்று சுமார் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த வேளாங்கண்ணி போலீசார் அங்கு சென்று பிணத்தை கைப்பற்றி நாகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 11, 2025

நாகை விவசாயிகளுக்கு ரூ.285.41 கோடி வரவு வைப்பு

image

நாகை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கடந்த செப்டம்பர் மாதம் 3ஆம் தேதியில் இருந்து நவம்பர் 9ந் தேதி வரை 26,213 விவசாயிகளிடம் இருந்து 119953 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு. இதுவரை ரூ.285.41 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் ஆகாஷ் இன்று தெரிவித்துள்ளார்.

News November 10, 2025

நாகை: மக்கள் குறைதீர் கூட்டம்

image

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வங்கிக் கடன், உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு மற்றும் கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 208 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

error: Content is protected !!