News March 29, 2024
தேர்தலை புறக்கணித்த கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை தோல்வி

மண்டலமாணிக்கம் ஊராட்சிக்குள்பட்ட கோடாங்கிபட்டியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அந்த கிராம மக்கள் அறிவித்தனர். இதைத் தொடர்ந்து கமுதி வட்டாட்சியர் சேதுராமன், காவல் ஆய்வாளர் குருநாதன், விஏஒ பாண்டி, தனிபிரிவு உதவி ஆய்வாளர் முத்துசாமி உள்ளிட்டோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் சமரசம் எட்டப்படாததால் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.
Similar News
News January 24, 2026
ராம்நாடு: பைக், கார் வைத்திருப்போர் இதை தெரிஞ்சுக்கோங்க

ராம்நாடு மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இங்கு <
News January 24, 2026
இராமநாதபுரம்: மீனவர்கள் 12 பேர் அபராதத்துடன் விடுதலை

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த (டிச.23) மீன்பிடிக்க சென்று எல்லை தாண்டி மீன்பிடித்த வழக்கில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களை நேற்று (ஜன.23) மன்னார் நீதிமன்ற நீதிபதி ஹிபத்துல்லா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்கள் 12 பேருக்கும் தலா ரூ.1.50 லட்சம் அபராதம், தொகையை கட்ட தவறினால் 6 மாத சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
News January 24, 2026
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (ஜனவரி 23) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.


