News November 25, 2025

தேனி: வகுப்பறைக்குள் சிறுவனை வைத்து பூட்டிச் சென்ற சம்பவம்

image

கூடலூா் அருகேயுள்ள கருநாக்கமுத்தன்பட்டியில் அரசு கள்ளா் ஆரம்பப் பள்ளி செயல்படுகிறது. இங்கு நேற்று (நவ.24) மாலை பள்ளி முடிந்து அனைவரும் வீடு திரும்பிய நிலையில் பள்ளிக்குள் மாணவர் ஒருவர் அலறும் சத்தம் கேட்டது. இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் சென்று வகுப்பறையைத் திறந்து பாா்த்த போது 4ம் வகுப்பு மாணவா் சாமு வகுப்பறையில் தூங்கி விட்ட நிலையில் வகுப்பறையில் வைத்து பூட்டிச் சென்றது தெரியவந்தது.

Similar News

News January 20, 2026

தேனி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>http://cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

News January 20, 2026

தேனியில் இளம் பெண் தற்கொலை..!

image

தேனி பகுதியை சேர்ந்தவர் கார்த்திகா (27). இவருக்கு அவ்வப்போது தீராத வயிற்று வலி ஏற்பட்டு அதற்கு சிகிச்சை எடுத்தும் பலனளிக்காத காரணத்தினால் வலியின் வேதனையில் இருந்து வந்த கார்த்திகா சில தினங்களுக்கு முன்பு விஷ விதைகளை சாப்பிட்டுள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று முன்தினம் (ஜன.18) அவர் உயிரிழந்தார். இது குறித்து அல்லிநகரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News January 19, 2026

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 19.01.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!