News August 20, 2024
தேனி மாவட்ட காவல்துறை நிர்வாகம் அறிவிப்பு

சைபர் க்ரைம் குற்றவாளிகள் ஆன்லைன் செயலின் முலம் லிங்க் அனுப்பி அதிக சம்பளத்துடன் பகுதி நேர வேலை வாய்ப்பு, அப்ளை செய்ய கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும் என்று வரும் குறுஞ்செய்தி லிங்கினை கிளிக் செய்ய வேண்டாம் என மாவட்ட காவல்துறை நிர்வாகம் இன்று (ஆக.19) தெரிவித்துள்ளது. மேலும் இது போன்ற குற்றங்களை 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
Similar News
News January 18, 2026
தேனி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

தேனி மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!
News January 18, 2026
தேனி: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை..!

தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே உப்புத்துறை பகுதியை சேர்ந்தவர் வீரபாண்டி (23). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இந்நிலையில் அதனை அவரது குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதனால் மன வேதனை அடைந்த அவர் நேற்று முன் தினம் (ஜன.16) அப்பகுதியில் உள்ள தோப்பில் வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 18, 2026
தேனி: சிலிண்டர் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

தேனி மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை SHARE பண்ணுங்க!


