News October 1, 2025
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று 30.09.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை உத்தமபாளையம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன் தலைமையில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
Similar News
News December 12, 2025
தேனி: பூச்சி மருந்து குடித்து பெண் தற்கொலை

கதிர்நரசிங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் போதுமணி (43). இவருக்கு சில வருடங்களாக மனநிலை பாதித்த நிலையில் தான் என்ன செய்கிறோம் என்பது தெரியாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் போதுமணியின் கணவர் தோட்டத்துக்காக பூச்சி மருந்து வாங்கி வைத்திருந்த நிலையில் அதனை போதுமணி குடித்துள்ளார். அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று (டிச.11) உயிரிழந்தார். ராஜ்தானி போலீசார் வழக்கு பதிவு.
News December 12, 2025
தேனி: SIR-ல் பெயர் இருக்கா? இல்லையா? CHECK பண்ணுங்க!

தேனி மக்களே, நீங்கள் நிரப்பி கொடுத்த SIR படிவத்தில் 2026 வாக்காளர் லிஸ்டில் உங்கள் பெயர் இருக்கிறதா? இல்லையா? என்பதை உங்க போனில் பார்க்க வழி உள்ளது
1.இங்கு <
2. FILL ENUMERATION -ஐ தேர்ந்தெடுத்து வாக்காளர் எண் பதிவுசெய்யுங்க.
மேலே உள்ள புகைப்படம் போல் வந்தது என்றால் உங்க பெயர் சமர்பிக்கபட்டது. இல்லையென்றால் உங்கள் BLO அதிகாரியை தொடர்புகொள்ளுங்க. SHARE பண்ணுங்க
News December 12, 2025
தேனி: பைக் குறுக்கே வந்ததால் ஆட்டோ கவிழ்ந்து விபத்து

கம்பம் நாராயணத்தேவன் பட்டியை சேர்ந்தவர் அரசக்குமார். இவர் தனது ஆட்டோவில் அதே பகுதியை சேர்ந்த தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சென்றார். கம்பம் GH அருகே கூடலூர் சாலையில் சென்றபோது பைக் குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி ஆட்டோ சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 8 தொழிலாளர்கள் காயமடைந்தனர். பின்பு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.


