News August 23, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 22.08.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

Similar News

News January 17, 2026

தேனி: மனைவி மீது பெட்ரோல் குண்டு வீசிய கணவன்

image

அல்லிநகரம் பகுதியில் வசித்து வருபவர் தெய்வராஜ் (31). இவருக்கும் இவரது மனைவி கவிதாவுக்கும் (29) கடந்த ஜன. 14ம் தேதி ஏற்பட்ட தகராறில் வீட்டை விட்டு வெளியே வந்த தெய்வராஜ், மது பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி மூடியில் திரி வைத்து தீ மூட்டி மனைவி கவிதாவை நோக்கி எறிந்துள்ளார். இதில் கவிதா விலகியதால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பெயரில் தெய்வராஜை அல்லிநகரம் போலீசார் கைது செய்தனர்.

News January 17, 2026

தேனி: பைக் விபத்தில் இளைஞர் பரிதாப பலி

image

ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (21). இவர் நேற்று முன்தினம் (ஜன.15) அவரது பைக்கில் ஆண்டிபட்டியில் இருந்து தேனிக்கு சென்றுள்ளார். பைக் அதிவேகமாக சென்ற நிலையில் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வேல்முருகன் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து க.விலக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 16, 2026

தேனி: செல்போன் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

image

மத்திய அரசு ‘சஞ்சார் சாதி’ என்னும் செயலியை அறிமுகம் செய்துள்ளது. மோசடி, தொலைந்து போன அல்லது திருடு போன மொபைல் இணைப்புகளை கண்டறிய, டிஜிட்டல் மோசடி குறித்து இந்த செயலியில் புகார் அளிக்கலாம். இந்த ஆப் மூலம் திருடு போன லட்சக்கணக்கான போன்கள் கண்டுபிடிக்கப்பட்டும், மோசடிகளுக்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை இங்கே கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். SHARE IT

error: Content is protected !!