News November 22, 2024
தேனி மாவட்டத்தில் நாளை வாக்காளர் சுருக்கத் திருத்த முகாம்

தேனி: மாவட்டத்தில் நவ.23 & 24 தேதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப்பணிகள் மாவட்டத்தில் உள்ள 1226 ஓட்டுச்சாவடிகளில் முகாம் நடைபெறவுள்ளது. சிறப்பு முகாம் நாட்களை தவிர்த்தும் பிற வேலை நாட்களில் ஓட்டுச்சாவடி மைய அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலகங்கள், ஆர்.டி.ஓ.,அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்களில் நவ. 28 வரை விண்ணப்பிக்கலாம்.
Similar News
News November 7, 2025
தேனி: ஒரு மாத பெண் குழந்தை உயிரிழப்பு

உப்புத்துறையை சேர்ந்த ராஜ்குமார் – ஜெயலட்சுமி தம்பதிக்கு அக்.2.ல் கடமலைக்குண்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2-வது பெண் குழந்தை பிறந்தது. பிறந்தது முதல் குழந்தைக்கு இருதயம், மூச்சுத்திணறல் பிரச்னை இருந்தது. நவ.5 மதியம் முதல் பால் குடிக்காமல் அழுது கொண்டே இருந்த நிலையில் அன்று இரவு குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் குழந்தை உயிரிழந்ததது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
News November 7, 2025
தேனியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

கொடுவிலாா்பட்டியில் உள்ள கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிா்வாகம், வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையம், ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்ககம் ஆகியவற்றின் சாா்பில் நவ.8 அன்று தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில் கலந்து கொள்ள விரும்புவர்கள் தங்களது கல்விச் சான்றிதழ் நகல்கள், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News November 6, 2025
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று 06.11.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ஆண்டிபட்டி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சிவசுப்பு தலைமையில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.


