News November 19, 2025

தேனி: மலை சாலையில் மண்சரிவு அபாயம்

image

தமிழக – கேரளாவை இணைக்கும் முக்கிய வழித்தடமாக குமுளி மலைச்சாலை உள்ளது. இந்த வழியாக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சபரிமலைக்கு செல்கின்றன. இந்த மலைச்சாலையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. விபத்து ஏற்படும் முன் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Similar News

News January 16, 2026

தேனி: செல்போன் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

image

மத்திய அரசு ‘சஞ்சார் சாதி’ என்னும் செயலியை அறிமுகம் செய்துள்ளது. மோசடி, தொலைந்து போன அல்லது திருடு போன மொபைல் இணைப்புகளை கண்டறிய, டிஜிட்டல் மோசடி குறித்து இந்த செயலியில் புகார் அளிக்கலாம். இந்த ஆப் மூலம் திருடு போன லட்சக்கணக்கான போன்கள் கண்டுபிடிக்கப்பட்டும், மோசடிகளுக்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை இங்கே கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். SHARE IT

News January 16, 2026

தேனி: ரூ.300 கேஸ் மானியம் பெற? இத செய்யுங்க!

image

தேனி மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? இங்கு <>க்ளிக் செய்து<<>> (Bharatgas, indane, HP) எந்த நிறுவனம் என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், ஐஎப்எஸ்சி கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் CREDITED குறுஞ்செய்தி வரும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News January 16, 2026

தேனி: மது விற்பனை செய்த இளைஞர் கைது

image

தேனி மாவட்டம், தேவதானப்பட்டி காவல் நிலைய போலீசார் சட்ட விரோத மது விற்பனை சம்பந்தமாக நேற்று (ஜன.15) தேவதானப்பட்டி பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அஜித் (26) என்பவர் பொது இடத்தில் வைத்து மது விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த 26 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக அஜித் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.

error: Content is protected !!