News August 7, 2025
தேனி: மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்

தேனி: முன்னாள் படைவீரர்கள், அவர்களைச் சார்ந்தவர்களின் சிறார்கள் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்கும் KSB Portal பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிக்க விண்ணப்பிக்க விரும்புவோர் www.desw.gov.in மற்றும் www.dgrindia.gov.in என்ற இணையதளத்தில் ஆக.15 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04546 252185 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 7, 2025
தேனி: கஞ்சா கடத்திய அண்ணன் – தங்கை கைது!

பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பகுதியில் நேற்று முன் தினம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு சந்தேகத்தின் பேரில் நின்றிருந்த 7 பேரை பிடித்து விசாரித்ததில் ஓடிசாவில் இருந்து பெரியகுளத்திற்கு 22.840 கிலோ கஞ்சா கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து சந்தோஷ்பானி, இவரது தங்கை ஜோஸ்னாபானி மற்றும் 17 வயது சிறுவன் உள்பட 7 பேர் மீது தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
News December 7, 2025
தேனி: அதிக வட்டி கேட்டு கொலை மிரட்டல்!

பெரியகுளம் பகுதியை சோ்ந்தவா் கண்ணன்(42). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பழனிசெட்டிபட்டியை சோ்ந்த சிவக்குமாரிடம், கண்ணன் ரூ.1 லட்சம் கடன் வாங்கிய நிலையில் 15 மாதங்களில் அசல் வட்டியாக மொத்தம் ரூ.1.50 லட்சம் திரும்பக் கொடுத்துள்ளார். இந்நிலையில் தன்னிடம் அதிக வட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுப்பதாக கண்ணன் அளித்த புகாரில் தேனி போலீசார் சிவக்குமார் மீது கந்து வட்டி தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு.
News December 7, 2025
தேனி: கரண்ட் கட்? Whatsapp மூலம் எளிய தீர்வு..!

தேனி மாவட்டத்தில் உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு – 94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இத்தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.


