News April 4, 2025
தேனி : மருத்துவர் தாமதத்தால் சிசு உயிரிழப்பு

போடியை சேர்ந்தவர் நல்லதம்பி. இவரது மனைவி சரண்யாவை பிரசவத்துக்காக நேற்று (ஏப்ரல்.3) அதிகாலை போடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த செவிலியர்கள் பனிக்குடம் உடைந்திருப்பதாக கூறி, இரவு நேர பணி மருத்துவருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வருவதற்கு தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மருத்துவர் வந்து பார்த்தபோது சரண்யாவின் கர்ப்ப பையிலேயே ஆண் சிசு உயிரிழந்தது தெரியவந்தது.
Similar News
News January 16, 2026
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று 15.01.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News January 15, 2026
தேனி: இலவச GAS அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

தேனி மாவட்ட மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <
News January 15, 2026
தேனி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE IT


