News June 1, 2024

தேனி: பெட்டிக்கடையை பார் ஆக்கியவர் கைது!

image

தேனி மதுவிலக்கு அமலாக்க விரிவு சார்பு ஆய்வாளர் பன்னீர்செல்வம் தலைமையிலான போலீசார் நேற்று(மே 31) ரோந்து சென்றனர். அப்போது உப்பார்பட்டி பஸ் ஸ்டாப் அருகே போதிராஜ் என்பவர் தனது பெட்டிக்கடையில் ஒருவருக்கு கிளாசில் மதுபானம் ஊற்றி கொடுத்துக் கொண்டிருப்பதை கண்டனர். போலீசார் கடையை சோதனையிட்டு மது பாட்டில்களை கைப்பற்றி, பெட்டிக்கடையை பார் ஆக்கியதற்காக அவரை கைது செய்தனர்.

Similar News

News July 9, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 09.07.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் மாவட்ட காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

News July 9, 2025

தேனி: B.E முடித்தவர்களுக்கு ரூ.1.2 லட்சம் சம்பளத்தில் வேலை

image

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 1340 Junior Engineer பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, B.E / B.Tech முடித்தவர்கள் <>இங்கே க்ளிக் <<>>செய்து, வரும் ஜூலை 21-க்குள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை வழங்கப்படும். இதற்கான எழுத்துத் தேர்வு மதுரையில் நடைபெற உள்ளது. இந்த தகவலை இப்போதே உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.

News July 9, 2025

கம்பம்: தாய் திட்டியதால் இளைஞர் தற்கொலை

image

கம்பம் பகுதியை சேர்ந்தவர் அஜித் (26). இவருக்கு கடந்த 40 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் அஜித் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அதனை அவரது தாயார் கண்டித்துள்ளார். இதனால் மன வேதனை அடைந்த அஜித் வீட்டில் யாரும் இல்லாத பொழுது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து கம்பம் வடக்கு போலீசார் நேற்று (ஜூலை.8) வழக்குப்பதிவு செய்து விசாரணை.

error: Content is protected !!