News November 19, 2025
தேனி: நெற்பயிருக்கு காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

தேனி: சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்ய நவ.30 வரை நீட்டிப்பு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. நெல் பயிருக்கு காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் பொது சேவை மையங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்கள் அல்லது 14447 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என வேளாண்துறையினர் தகவல்.
Similar News
News January 21, 2026
தேனியில் இன்று இங்கெல்லாம் கரண்ட் கட்..!

தேனி, ஆண்டிபட்டி துணை மின் நிலையத்தில் இன்று (புதன்கிழமை) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் தேனி, உப்பர்பட்டி, குன்னூர், தொப்புப்பட்டி, ஆண்டிபட்டி, டி.சுப்புலாபுரம், ராஜகோபாலன்பட்டி, பாலகொம்பை, ஏத்தகோவில், பொம்மிநாயக்கன்பட்டி மற்றும் ராஜதானி உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News January 21, 2026
இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, எவ்வித வேலையும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பத்தை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து அதன் பூர்த்தி செய்து வழங்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.