News November 19, 2025

தேனி: நெற்பயிருக்கு காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

image

தேனி: சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்ய நவ.30 வரை நீட்டிப்பு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. நெல் பயிருக்கு காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் பொது சேவை மையங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்கள் அல்லது 14447 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என வேளாண்துறையினர் தகவல்.

Similar News

News January 21, 2026

தேனியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

image

தேனி மாவட்டம், சிவலிங்கநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராம்குமார்(31). இவர் கடந்த சில நாட்களாகவே மன உளைச்சல் ஏற்பட்ட நிலையிலும், மனநிலை பாதித்த நிலையிலும் காணப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம ராம்குமார் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 21, 2026

தேனியில் 1,550 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..!

image

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஜன.23ம் தேதி (வெள்ளிக்கிழமை) வீரபாண்டி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இம்முகாமில் 8, 10, 12th, ITI, டிகிரி படித்த அனைவரும் கலந்து கொள்ளலாம். 16 நிறுவனங்களில் 1,550 காலிப்பணியிடங்கள் உள்ளது. மேலும், விவரங்களுக்கு 76959-73923 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE IT

News January 21, 2026

போடியில் வாலிபருக்கு கத்தி குத்து

image

போடியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (37). இவரது மனைவி மெளனிகா 2 வருடத்திற்கு முன் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு ராதாகிருஷ்ணன் தான் காரணம் என மெளனிகாவின் அண்ணன் மதன்குமார் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இதையடுத்து நேற்று முன் தினம் இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் மதன்குமார் ராதாகிருஷ்ணனை கத்தியால் குத்தினார். இதில் பலத்த காயமடைந்த அவர் GH-ல் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து போடி போலீசார் வழக்குப்பதிவு.

error: Content is protected !!