News March 27, 2024

தேனி: ஆர்வம் காட்டும் சுயேட்சை வேட்பாளர்கள்

image

தேனி மாவட்டத்தில் சுயேட்சை வேட்பாளர்கள் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஆர்.வி.ஷஜீவனாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர். சுயேட்சை வேட்பாளர்களாக அறிவரசு பாண்டியன், ரேவதி, நிஷாந்த், தியாகராஜன், அஜித்குமார், பிரகாஷ், சதீஷ்குமார் உள்ளிட்டோர் சுயேட்சை வேட்பாளர்களாக இன்று தங்களது வேட்பு மனுக்களை மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி அவர்களிடம் தாக்கல் செய்தனர்.

Similar News

News January 17, 2026

தேனி: விஷம் குடித்து பெண் தற்கொலை..

image

உத்தமபாளையம் அருகே க.புதுப்பட்டியை சேர்ந்தவர் மகாராஜன். இவர் ஜன.10 அன்று உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இதனால் அவரது மனைவி போதுமணி மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு GH-ல் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு.

News January 17, 2026

தேனி: டிகிரி போதும்., விவசாய வங்கியில் வேலை ரெடி!

image

தேனி மக்களே, தேசிய விவசாய – கிராம வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு பணிகளுக்கு 162 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் ibpsreg.ibps.in/nabhindec25/ – என்ற தளத்தில் பிப். 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ,32,000 வழங்கப்படும். தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE IT.

News January 17, 2026

தேனி: மனைவி மீது பெட்ரோல் குண்டு வீசிய கணவன்

image

அல்லிநகரம் பகுதியில் வசித்து வருபவர் தெய்வராஜ் (31). இவருக்கும் இவரது மனைவி கவிதாவுக்கும் (29) கடந்த ஜன. 14ம் தேதி ஏற்பட்ட தகராறில் வீட்டை விட்டு வெளியே வந்த தெய்வராஜ், மது பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி மூடியில் திரி வைத்து தீ மூட்டி மனைவி கவிதாவை நோக்கி எறிந்துள்ளார். இதில் கவிதா விலகியதால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பெயரில் தெய்வராஜை அல்லிநகரம் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!