News August 23, 2025

தேனி: அரசு வழங்கும் ரூ.25 லட்சம் தனி நபர் கடன்!

image

தேனி மக்களே, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (TABCEDCO) சார்பில் புதிய தொழில் துவங்க, வியாபாரம் செய்ய ரூ.25 லட்சம் வரை தனிநபர் கடனுதவி வழங்கப்படுகிறது. 18 – 60 வயதுடையோர் விண்ணப்பிக்கலாம். ஆண்டு வட்டி 7 முதுல் 8% ஆகும்.<> இங்கே கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம் (அ) உங்கள் பகுதி கூட்டுறவு/வங்கிகளை அணுகவும். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்ங்க.

Similar News

News January 18, 2026

தேனி: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை..!

image

தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே உப்புத்துறை பகுதியை சேர்ந்தவர் வீரபாண்டி (23). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இந்நிலையில் அதனை அவரது குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதனால் மன வேதனை அடைந்த அவர் நேற்று முன் தினம் (ஜன.16) அப்பகுதியில் உள்ள தோப்பில் வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 18, 2026

தேனி: சிலிண்டர் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

image

தேனி மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை SHARE பண்ணுங்க!

News January 18, 2026

தேனியில் ஜன.21-ல் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்

image

தேனி அரசு ITI வளாகத்தில் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் ஜன.21 அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. இதில் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் என 18 நிறுவனங்கள் பங்கேற்று தொழிற்பழகுநர் பயிற்சிக்கு 400-க்கும் மேற்பட்டோரை தேர்வு செய்யவுள்ளனர். அரசு, தனியார் ஐ.டி.ஐ.,களில் படித்து தேர்ச்சி பெற்ற, பெறாத அனைத்து பயிற்சியாளர்களும் முகாமில் பங்கேற்கலாம் என கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!