News September 30, 2025
தேனி:விசேஷத்திற்கு சென்று திரும்பியவர் பரிதாப பலி

மதுரை மாவட்டம், சாப்டூர் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (23). இவர் நேற்று முன்தினம் தேனியில் அவரது நண்பரின் விசேஷத்திற்கு சென்று விட்டு பைக்கில் வீடு திரும்பி உள்ளார். ஆண்டிபட்டி அருகே பைக் வந்து கொண்டிருந்த பொழுது எதிர் திசையில் சதீஷ்குமார் என்பவர் ஓட்டி வந்த கார் பைக் மீது மோதியது. இந்த விபத்தில் ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்கு (செப்.29) பதிவு
Similar News
News December 8, 2025
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று (07.12.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News December 7, 2025
தேனி: மகளிர் உரிமைத் தொகை ரூ.1 மெசேஜ் வரலையா?

தேனி மக்களே, டிச.12 முதல் விடுபட்ட மகளிர்களுக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது. பணம் வருவதற்கான ரூ.1 மெசேஜ் வரலையா? உங்க ஆதார் எண்ணுடன் எந்த வங்கி கணக்கு இணைக்கபட்டு இருக்கிறதோ அந்த வங்கி கணக்கு தான் பணம் வரும். இங்கு <
News December 7, 2025
கொடி நாள் நிதி வழங்கிய மாவட்ட ஆட்சியர்

அனைத்து பகுதிகளிலும் முப்படை வீரர் கொடி நாள் இன்று 07.12.2025 ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. இதனை அடுத்து தேனி மாவட்டத்தின் ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் கொடி நாள் நிதிக்கு தனது நன்கொடையை வழங்கினார். இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர். இதனை தொடர்ந்து அனைவரும் தங்களால் முடிந்த நிதியை வழங்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


