News August 21, 2024

தேனியில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் இன்று(ஆக.,21) காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி குமரி, நெல்லை, தென்காசி, தேனி மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தென் மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

Similar News

News January 23, 2026

குடியரசு தினத்தில் மது விற்றால் கடும் நடவடிக்கை – கலெக்டர்

image

தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் தனியார் மதுபான கூடங்கள் ஆகியவை வருகிற 26-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு எவ்வித மது விற்பனையும் மேற்கொள்ளக் கூடாது. மேலும், மேற்காணும் நாளில் மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

News January 23, 2026

தேனி: கல்யாண சான்றிதழ் வேண்டுமா..? CLICK NOW

image

தேனி மக்களே.. ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். இங்கு <>க்ளிக் செய்து<<>> ஆதார் கார்டு, VOTER ID, பத்தாம் வகுப்பு சான்றிதழ், திருமண அழைப்பிதழ் மற்றும் போட்டோவுடன் உங்க Phone-யிலேயெ விண்ணப்பிக்கலாம்.. (பழைய திருமணங்களும் இங்கு பதிவு செய்யலாம்) 7 நாட்களுக்குள் சான்றிதழ் கிடைத்து விடும். ஷேர் பண்ணுங்க.

News January 23, 2026

தேனி: வாகனம் மோதி ஒருவர் பரிதாப பலி

image

தேவதானப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கணேசன். அக்குபஞ்சர் மருத்துவரான இவர் நேற்று முன் தினம் மாலை வத்தலக்குண்டு – பெரியகுளம் சாலையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தேவதானப்பட்டி போலீசார் நேற்று வழக்குப்பதிவு.

error: Content is protected !!