News August 19, 2024
தேனியில் சாலை வசதி இல்லாததால் பறிபோன உயிர்

தேனி அருகே சாலை இல்லாததால் டோலியால் தூக்கி சென்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்தார். சின்னூர் காலனியை சேர்ந்த மாரியம்மாள் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். நேற்று அவரை சுமார் 5 கிலோ மீட்டர் வரை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் டோலி கட்டி சுமந்து சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் அவர் இன்று உயிரிழந்தார். இச்சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News January 17, 2026
தேனி: டிகிரி போதும்., விவசாய வங்கியில் வேலை ரெடி!

தேனி மக்களே, தேசிய விவசாய – கிராம வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு பணிகளுக்கு 162 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் ibpsreg.ibps.in/nabhindec25/ – என்ற தளத்தில் பிப். 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ,32,000 வழங்கப்படும். தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE IT.
News January 17, 2026
தேனி: மனைவி மீது பெட்ரோல் குண்டு வீசிய கணவன்

அல்லிநகரம் பகுதியில் வசித்து வருபவர் தெய்வராஜ் (31). இவருக்கும் இவரது மனைவி கவிதாவுக்கும் (29) கடந்த ஜன. 14ம் தேதி ஏற்பட்ட தகராறில் வீட்டை விட்டு வெளியே வந்த தெய்வராஜ், மது பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி மூடியில் திரி வைத்து தீ மூட்டி மனைவி கவிதாவை நோக்கி எறிந்துள்ளார். இதில் கவிதா விலகியதால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பெயரில் தெய்வராஜை அல்லிநகரம் போலீசார் கைது செய்தனர்.
News January 17, 2026
தேனி: பைக் விபத்தில் இளைஞர் பரிதாப பலி

ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (21). இவர் நேற்று முன்தினம் (ஜன.15) அவரது பைக்கில் ஆண்டிபட்டியில் இருந்து தேனிக்கு சென்றுள்ளார். பைக் அதிவேகமாக சென்ற நிலையில் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வேல்முருகன் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து க.விலக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


