News July 15, 2024

தேனியில் கனமழை எச்சரிக்கை

image

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்,மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தேனி மாவட்டத்தில் கனமழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, தேனி மாவட்டத்தின் அநேக இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த வாரத்தில் மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News July 8, 2025

உள்ளூர் வங்கியில் வேலை! ரூ.85,000 வரை சம்பளம்

image

தேனி மக்களே பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு தேர்வு மையம் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அமைக்கப்படும். <>விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்<<>>. கடைசி நாள் 24.7.25 ஆகும். SHARE IT

News July 8, 2025

தேனி: பல் மருத்துவக் கல்லுாரி மாணவி தற்கொலை

image

தேனி என்.ஆர்.டி., நகர் பகுதியை சேர்ந்தவர் பவிஷ்யா (20). இவர் மதுரை சி.எஸ்.ஐ., பல் மருத்துவக் கல்லுாரியில் 2.ம் ஆண்டு படித்து வந்தார். விடுமுறையில் வீட்டிற்கு வந்தவர், பெற்றோரிடம் படிப்பு மிக கடினமாக இருப்பதாக கூறி மன உளைச்சலில் இருந்துள்ளார். தேர்வுக்கு செல்ல இருந்த நிலையில் நேற்று (ஜூலை.7) அதிகாலை மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேனி போலீசார் வழக்கு பதிவு.

News July 8, 2025

தேனியில் குடிநீர் பிடிக்க சென்ற இடத்தில் பெண் உயிரிழப்பு

image

தேனி, துரைச்சாமிபுரம் பட்டாளம்மன் கோயில் தெருவை சேர்த்த காளிமுத்து என்பவரது மனைவி பாப்பாத்தி இவர் வீட்டின் முன்பு உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்கும் போது கீழே விழுந்து காயம் ஏற்பட்டதாகவும், தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கபட்டு சிசிச்சை பலனின்றி இறந்தார். இந்த இறப்பு குறித்து இவரது மகன் முருகன் கடமலைகுண்டு காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை தொடர்ந்து போலீஸார் விசாரணை.

error: Content is protected !!