News July 16, 2024

தேசிய நல்லாசிரியர் விருது விண்ணப்பிக்க அழைப்பு

image

முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினம் செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகின்றது. இந்த நாளில் சிறந்த ஆசிரியர்களுக்கு மத்திய அரசு சார்பில் தேசிய விருது ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகின்றது. இதற்கு தகுதியான திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் national.awardstoteachers.education.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Similar News

News July 8, 2025

ரிதன்யா கணவர் ஜாமின் மனு தள்ளுபடி

image

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த ரிதன்யா வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பான ஆடியோ வெளியான நிலையில் ரிதன்யாவின் கணவர் கவின்குமார் மற்றும் அவரது தந்தை ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில்ம் திருப்பூர் மாவட்டம் முதன்மை நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

News July 7, 2025

திருப்பூரில் இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் தினமும் ஏரியா வாரியாக மாவட்டம் முழுவதும், இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் மற்றும் செல்போன் எண்கள் சமூக வலை தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விபரத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டு உள்ளது. அதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் குற்ற செயல்களை போலீசாருக்கு தெரிவிக்கலாம்.

News July 7, 2025

திருப்பூர் ரயில் பயணிகளின் கவனத்திற்கு

image

திருப்பூர்: ரயில் தண்டவாளங்கள் பராமரிப்பு பணிகள் பல்வேறு பகுதிகளில் நடைபெறுவதால் எர்ணாகுளம் – டாடாநகர் எக்ஸ்பிரஸ்(வண்டி எண்.18190) வருகிற 8 மற்றும் 9ஆம் தேதிகளில் எர்ணாகுளத்தில் இருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட்டு போத்தனூர் – கோவை – இருகூர் வழியாக இயக்கப்படும். ஆலப்புழா – தன்பாத் எக்ஸ்பிரஸ்(13352) வருகிற 8 மற்றும் 9ஆம் தேதிகளில் ஆலப்புழாவில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டுகிறது.

error: Content is protected !!