News August 23, 2024
தேசிய குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆகஸ்ட் 23 மற்றும் ஆகஸ்ட் 30 ஆகிய நாட்களில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் நடைபெற உள்ளதாக இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இந்த திட்டம் வெற்றியடைய ஒத்துழைக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Similar News
News November 18, 2025
கள்ளக்குறிச்சி: ஒரு பெண் மீது 10 பேர் தாக்குதல்!

கள்ளக்குறிச்சி: புதுப்பட்டை சேர்ந்த தேவி (30) பெட்டிகடை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று சிவா (44) தேவியிடம் ஹான்ஸ் கேட்டுள்ளார். அதற்கு, இங்கு அந்த பொருட்களை விற்பதில்லை என கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சிவா, தனது நண்பர்கள் 9 பேரை அழைத்து வந்து தேவியை மானபங்கம் செய்து தாக்கியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் சிவா உட்பட 4 பேரை போலீசார் கைது செய்த நிலையில், 6 பேரை தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (நவ.17) இரவு முதல் நாளை (நவ.18) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!