News August 8, 2025
தேசிய குடற்புழு நீக்க தினத்தில் மாத்திரைகள் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், அரசு, தனியார் கல்லூரிகளில், பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவ அலுவலர்கள் ஆகியோர் மேற்பார்வையில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட உள்ளது. இந்த முகாமில் பங்கேற்று பயன்பெற கலெக்டர் அருணா அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News November 10, 2025
புதுகை: ஆசிய தடகளப் போட்டியில் 2 தங்கம்

பொன்னமராவதியில் போக்குவரத்து காவல் ஆய்வாளராக பணியாற்றிய பிரான்சிஸ் மேரி ஆசிய அளவிலான மூத்தோர் தடகள 400 மீட்டர் போட்டியில் தங்கப்பதக்கமும் மற்றும் தடை தாண்டும் 400 மீட்டர் போட்டியில் தங்கப்பதக்கமும் பெற்று சாதனை படைத்துள்ளார். இப்போட்டியில் 2 தங்கப் பதக்கங்களை வென்ற தடகள வீராங்கனைக்கு பொதுமக்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
News November 10, 2025
புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (நவ.09) இரவு 10 மணி முதல் இன்று (நவ.10) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News November 9, 2025
புதுக்கோட்டை: உங்கள் PAN கார்டு ரத்து செய்யப்படலாம்!

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க<


