News June 17, 2024
தேசியக்கொடி அவமதிப்பு செயலுக்கு முற்றுப்புள்ளி

நோயாளிகளுக்கான கட்டில் உருவாக்கியதற்காக ஜனாதிபதியிடம் சிறந்த கண்டுபிடிப்பிற்கான விருது பெற்றவர் நாகர்கோவிலை சேர்ந்த சரவணமுத்து. இந்தநிலையில், சுதந்திர தினம் அன்று ஒருநாள் பயன்படுத்தும் தேசியக்கொடிகள் மறுநாள் குப்பை மேடுகளில் கிடைக்கிறது. இதை ஒழிக்க புதிய தொழில்நுட்பத்தை உறுவாக்கியுள்ளதாக முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
Similar News
News January 24, 2026
குமரி: பொங்கல் விழாவில் தகராறு – இளைஞர் பலி

சரலூரைச் சேர்ந்த ரமேஷ், இவரது நண்பர் மணிகண்டன் சேர்ந்து ஜன.15 அன்று நடந்த பொங்கல் விழாவில் ஏற்பட்ட தகராறு குறித்து முகேஷ் கண்ணன் என்பவரிடம் கேட்க சென்றனர். அப்போது முகேஷ் கண்ணன் அரிவாளால் ரமேஷ் (ம) மணிகண்டனை வெட்டினார். இதில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த மணிகண்டன் GH-ல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். இதையடுத்து இந்த வழக்கு இரட்டைக் கொலை வழக்காக மாறியுள்ளது.
News January 24, 2026
குமரி: GH-ல் பிரச்சனையா? இனி இதை பண்ணுங்க!

குமரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியான தரத்தில் இல்லை என புகார் எழுதா?? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா?? தயங்கமா குமரி மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 04652-275089 அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும். இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்க SAVE பண்ணுங்க.
News January 24, 2026
குமரி: சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் – SP உத்தரவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றும் 24 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் நேற்று பிறப்பித்தார். இதையடுத்து தக்கலை சப்-இன்ஸ்பெக்டர் துரைராஜ் கொற்றிக் கோட்டிற்கும், கொற்றிக்கோடு சப்-இன்ஸ்பெக்டர் ராம் சங்கர் குளச்சலுக்கும், குளச்சல் தினேஷ் லியோன் சுசீந்திரத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


