News March 28, 2024
தென் மாவட்டங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள்

புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகை என தொடர் விடுமுறை வருவதால் தென் மாவட்டங்களுக்கு செல்ல வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இன்று 505 பேருந்துகளும் நாளை 300 பேருந்துகளும் சனிக்கிழமை 345 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 13, 2026
செங்கல்பட்டு: பொங்கலுக்கு சொந்த ஊருக்கு போறீங்களா?

செங்கை மக்களே, பொங்கல் விடுமுறையின் போது சொந்த ஊருக்கு செல்ல பேருந்து கிடைப்பது என்பது குதிரைக்கொம்பாக உள்ளது. இதுபோன்ற சமயத்தில் ஆம்னி பேருந்துகள் அதிகளவு கட்டணத்தை உயர்த்தி மக்களிடம் கொள்ளையடிக்கின்றன. இதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. செங்கையில் உள்ளவர்களுக்கோ (அ) உங்களுக்கு தெரிந்தவர்களுக்கோ ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் 9790550052எண்ணில் புகார் செய்யலாம். ஷேர்!
News January 13, 2026
செங்கை: புழுதி பறந்த கார் – பீதியில் மக்கள்!

மறைமலை நகர் நகராட்சி 8-வது வார்டில், நகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானம், காலை & மாலை நேரங்களில் அதிக அளவில் கூட்டம் நிறைந்து காணப்படும். இதில் நேற்று மாலை இரண்டு கார்களில் வந்த, 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள், அதிக வேகமாக கார்களை இயக்கி மைதானத்தில் புழுதி பறக்க சாகசத்தில் ஈடுபட்டனர். இதுபோன்று வாகனங்களை ஓட்டுவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்துள்ளது.
News January 13, 2026
செங்கையில் உள்ளவர்களுக்கு பொங்கலுக்கு குட் நியூஸ்!

செங்கல்பட்டு, கோவளம் பகுதியில் தனியார் ஹெலிகாப்டர் மையமும், தமிழ்நாடு சுற்றுலாத்துறையும் இணைந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுற்றுலா பயணிகளுக்கு ஹெலிகாப்டர் சாகச சவாரியை ஒரு வருட இடைவெளிக்கு பிறகு நேற்று மீண்டும் தொடங்கியது. அமைச்சர் தா.மோ.அன்பரசன் சுற்றுலா பயணிகளுக்கான சாகச ஹெலிகாப்டர் சவாரி பயணத்தை தொடங்கி வைத்தார். இது 8 நாட்கள் நடைபெற உள்ளது.


