News November 25, 2025
தென் மண்டலத்தில் 12 இன்ஸ்பெக்டர்கள் இடம் மாற்றம்

மதுரை உட்பட 10 தென்மாவட்டங்களை உள்ளடக்கிய தென் மண்டல காவல்துறையில் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில், திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளராக பணிபுரிந்த ராமலட்சுமி, சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் முத்துப்பாண்டி உட்பட 12 பேர் மதுரை, திண்டுக்கல், நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News January 21, 2026
மதுரை: பைக் மோதி தூக்கி வீசப்பட்டவர் உயிரிழப்பு..

செக்கானூரணியை சேர்ந்தவர் மொக்கை மாயன் (73). தேனி – மதுரை ரோட்டில் பசும்பொன் நகர் அருகே சாலையோரம் நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக அதி வேகமாக வந்த புல்லட் பைக் இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். செக்கானூரணி போலீசார் டூ வீலரை ஒட்டி வந்த வடபழஞ்சியை சேர்ந்த மணிகண்டன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

JUST IN மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றம்.!

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோவில் தெப்பத் திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜன.26 அன்று சைவ சமய ஸ்தாபித வரலாற்று தீவையும், ஜன.30 ல் தெப்பம் முட்டு தள்ளுதல் நிகழ்வு நடைபெறும். அதனைத் தொடர்ந்து பிப்.1 ஆம் தேதி, மீனாட்சி சுந்தரேஸ்வரரின் பிரியா-விடையுடன் வண்டியூர் தெப்பக்குளத்தில் தெப்ப திருவிழா கோலாகலமாக நடைபெறும்.