News June 19, 2024
தென்காசி விவசாயிகள் கவனத்திற்கு

மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள், ஜூன் மாதத்தில் வழங்கப்படும் 17ஆவது தவணையைப் பெற வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம். வங்கி கணக்கு தொடங்காத தென்காசி மாவட்ட விவசாயிகள், தபால் நிலையங்களில் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கை தொடங்கி அல்லது சேமிப்பு வங்கி கணக்கை தொடங்கி அதனுடன் ஆதார் எண்ணை இணைத்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 19, 2026
தென்காசி: இனி தாலுகா ஆபிஸ் அலையாதீங்க!

ரேஷன் கார்டில் உங்க புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு தாலுகா அலுவலகங்கள் அலைய வேண்டியதில்லை.
உங்க போன்ல புது உறுப்பினர்களை சேர்க்கலாம்.
1.இங்கு <
2. அட்டை பிறழ்வுகள் -ஆ தேர்ந்தெடுங்க
3. உறுப்பினர் சேர்க்கை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்யுங்க..
7 நாட்களில் உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்துவிடும். SHARE பண்ணுங்க.
News January 19, 2026
மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் 386 மனுக்கள் பெறப்பட்டன

தென்காசியில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 386 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு ஆட்சியர் உத்தரவிட்டார்.
News January 19, 2026
தென்காசி: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

ஆலங்குளம் சர்தார் ராஜா பொறியியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மேற்பார்வையில், வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஜன.23ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறவுள்ளது. முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobstn.gov.in என்ற தனியார்துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். *ஷேர் செய்தால் பிறருக்கு உதவும்.


