News March 23, 2024
தென்காசி விடுதலை சிறுத்தைகள் ஆலோசனை

தென்காசியில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற செயலாளர் வர்கீஸை கடையம் ஒன்றிய செயலாளர் ஆதித்தமிழன் அன்பழகன் மற்றும் ஒன்றிய மாணவரணி நிர்வாகி கார்த்திக் நாடார், ஆழ்வை நகரச் செயலாளர் தங்கராஜா, தென்காசி ரீகன் குமார் ஆகியோர் சந்தித்து பேசினர்.
அப்போது நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற ஆலோசனை செய்தனர்.
Similar News
News November 8, 2025
தென்காசி: சிறுவனை கடித்த தெரு நாய்

கடையநல்லூர் நகராட்சி, கிருஷ்ணாபுரம் கோகுல் நகர் பகுதியை சேர்ந்த சிறுவன் நேற்று காலை வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்தபோது அப்பகுதியில் சில தெருநாய்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுள்ளது. அப்போது ஒரு வெறி நாய் அங்கு இருந்த சிறுவனின் வலது கையில் கடித்தது. சிறுவனுக்கு கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.
News November 8, 2025
தென்காசி மக்கள் திட்டுவதாக புலம்பிய எம்.எல்.ஏ

இரட்டைகுளம் – ஊத்துமலை கால்வாய் திட்டம் செயல்படுத்த படவில்லை, சொன்னபடி முதல்வர் ஸ்டாலின் செய்து கொடுக்காததால் என் தொகுதி மக்கள் என்னை, நீயெல்லாம் என்னய்யா எம்எல்ஏ… இந்தத் திட்டத்தைக் கூட உன்னால கொண்டுவர முடியலையே என்று திட்டுகிறார்கள் தென்காசி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ-வான பழனி நாடார் தான் இப்படி புலம்பி இருக்கிறார்
News November 8, 2025
தொழில் தொடங்க ஆர்வம் உள்ள நபர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

தென்காசி மாவட்டத்தில் வேளாண் விளைபொருட்கள் மதிப்புக்கூட்டும் மையங்களை தொடங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள், பெண்கள், பழங்குடியினர், ஆதிதிராவிடர், பொதுப்பிரிவினர் அனைவரும் தொழில் தொடங்க வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தகவல்.


