News November 18, 2024

தென்காசி மக்கள் குறைதீர் கூட்டம் விவரம்

image

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் முகாமில் கலெக்டர் கமல் கிஷோர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். இதில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 410 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் உரிய நடவடிக்கைக்காக பரிந்துரை செய்யப்பட்டது.

Similar News

News December 6, 2025

தென்காசி: 2 கிராமத்திற்கு ரூ.1 கோடி பரிசு

image

சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையினையும் கடைபிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து கௌரவிக்கும் வகையில், தலா ரூ.1 கோடி ஊக்கத்தொகை மற்றும் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுகள் வழங்கப்படும். அந்த வகையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள கே.ஆலங்குளம் மற்றும் கலிங்கப்பட்டி ஊராட்சிகளுக்கு சமூக நல்லிணக்கத்திற்கான விருதுக்கு தேர்வு. கலிங்கப்பட்டி மதிமுக தலைவர் வைகோ சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.

News December 6, 2025

ஆலங்குளம்: போலீஸ் ஏட்டுக்கு அரிவாள் வெட்டு! 2 பேர் கைது

image

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூர் கிராமத்தில் குடும்பத் தகராறில் ஏற்பட்ட மோதலை விசாரிக்க சென்ற போலீஸ் ஏட்டு முருகன் என்பவரை இரு நபர்கள் அரிவாளால் வெட்டினர். போலீசார் வழக்கு பதிவு செய்து அரிவாளால் வெட்டியதாக பொத்தையை சேர்ந்த இசக்கி பாண்டி (28) அவரது நண்பர் பேச்சி துரை (19) ஆகிய இருவரை நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

News December 6, 2025

தென்காசி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

தென்காசி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!