News October 20, 2025
தென்காசி: பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று நாம் பலரும் சொந்தகாரர்கள் வீடுகள் மற்றும் நாளை பணி திரும்ப செல்வோர் அரசு பேருந்துகளில் செல்ல திட்டமிட்டிருப்போம். அவ்வாறு நீங்கள் பயணிக்கும் போது பேருந்துலேயே உங்கள் Luggage-ஐ மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதற வேண்டாம். 044-49076326 என்ற எண்னை தொடர்பு கொண்டு, டிக்கெட் எண் மற்றும் பயண விவரங்களை கூறினால் போதும் உங்கள் பொருட்கள் பத்திரமாக வந்து சேரும். ஷேர் பண்ணுங்க!
Similar News
News December 11, 2025
தென்காசி நீதிமன்றத்தில் ராக்கெட் ராஜா ஆஜர்

ஏகே 47, ராக்கெட் லாஞ்சர் உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருந்ததாக பனங்காட்டு படை கட்சியின் நிறுவனத் தலைவர் ராக்கெட் ராஜா மீது வழக்கு பதிவு செய்யபட்டது. இந்த விசாரணைக்குறித்து இன்று தென்காசி நகராட்சிக்குட்பட்ட ஆயிரப்பேரி செல்லும் சாலையில் உள்ள நீதிமன்றத்தில் ராக்கெட் ராஜா ஆஜரானார். எனவே நீதிமன்றத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
News December 11, 2025
தென்காசியில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு…

தென்காசி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News December 11, 2025
தென்காசி மாவட்டத்தில் 2,274 வீடுகள் ஒதுக்கீடு

தென்காசி மாவட்டத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2024-25, 2025-26 நிதி ஆண்டுகளில் ஆலங்குளம் 739, கடையம் 192, கடையநல்லூர் 161, கீழப்பாவூர் 209, குருவிகுளம் 216, மேலநீலிதநல்லூர் 209, சங்கரன்கோவில் 170, வாசுதேவநல்லூர் 147, தென்காசி ஒன்றியத்தில் 121, செங்கோட்டை 110 வீடுகள் என மொத்தம் ரூ.70.49 கோடியில் 2,274 வீடுகள் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


