News November 28, 2024
தென்காசி: பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம்

சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக, சமூக நீதிக்கான ‘தந்தை பெரியார்’ விருது 1995ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. விருது பெறுபவருக்கு ரூ.5 லட்சம் தொகையும், தங்க பதக்கமும் வழங்கப்படுகிறது. இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் இவ்விருதுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டிச.,12-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என நேற்று தென்காசி கலெக்டர் கமல் கிஷோர் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News November 10, 2025
தென்காசி மக்களை உடனே CHECK பண்ணுங்க!

தென்காசி மக்களை, வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு சேக் பண்ணுங்க.
புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு <
News November 10, 2025
தென்காசி: பெண் தீக்குளிக்க முயற்சி

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே சிந்தாமணி அம்பேத்கர் 5ஆம் தெருவைச் சேர்ந்த வள்ளியம்மாள் (43) என்பவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்த நிலத்தில் பயிர் செய்வது தொடர்பாக வேலுச்சாமி, கணேசன், சொக்கன் ஆகியோருடன் தகராறு இருந்துள்ளது. காவல் நிலையம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார் அவரை காப்பாற்றினர்.
News November 10, 2025
தென்காசியில் நாளை இங்கெல்லாம் மின்தடை

தென்காசி கோட்ட செயற்பொறியாளர் (பொ) பா.கற்பகவிநாயக சுந்தரம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மங்கம்மாள் சாலை உப மின் நிலையத்தில் நவ.11 மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. தென்காசிபுதிய பேருந்து நிலையம், மங்கம்மாள் சாலை பகுதிகள், சக்தி நகர், காளிதாசன் நகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, கீழப்புலியூர் பகுதிகளில் காலை 9 மணி 5 மணி வரை மின்தடை செய்யப்படும். SHARE!


