News August 5, 2025

தென்காசி: நாய் கடித்து 3 பேர் காயம்

image

தென்காசி, கடையநல்லூர் மக்கா நகர் மற்றும் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த முதியவர் மற்றும் 2 சிறுவர்கள் உட்பட 3 பேரை தெருநாய் கடித்ததில் பலத்த காயமடைந்தனர். 3வரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஒரே பகுதியைச் சேர்ந்த மூன்று பேரை தெருநாய்கள் கடித்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கடையநல்லூர் நகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை.

Similar News

News November 10, 2025

தென்காசியில் 74.84 % விண்ணப்ப படிவம் வழங்கல்

image

தென்காசியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLOs)  04.11.2025 முதல் 04.12.2025 வரை வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு படிவம் வழங்கி வருகின்றனர்.  இதுவரை தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து 5 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து. 09.11.2025-ம் தேதி  காலை 08.00 மணி நிலவரப்படி  மொத்தம் 13,75,091 மொத்த வாக்காளர்களில் 10,29,175 வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. 74.84 % சதவீதம் வழங்கபட்டுள்ளது.

News November 10, 2025

சீருடை பணியாளர் தேர்வு பாதுகாப்பு பணியில் காவல்துறை

image

(நவ.9) தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெறும் இரண்டாம் நிலை காவலர் , சிறை காவலர் , தீயணைப்பாளர் பதவிக்கான எழுத்து தேர்வு மாவட்டத்திலுள்ள 8 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இத்தேர்விற்கு காவல்துறை தலைவர் சந்தோஷ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் 800 காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

News November 9, 2025

தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி அதிகாரிகளின் விவரங்கள்

image

தென்காசி மாவட்ட உட்கோட்ட பகுதியில் உள்ள ஊர்களான தென்காசி, ஆலங்குளம் சங்கரன்கோவில் புளியங்குடி போன்ற பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு இன்று (09.11.25) காவல்துறை உதவி தேவைப்பட்டால் மேலே உள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது காவல்துறை உதவி எண் 100 ஐ அழைக்கலாம் என்று காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!