News April 3, 2025

தென்காசி: கேரளா அரசு பேருந்தில் கஞ்சா கடத்தியவர் கைது

image

தென்காசி புதிய பேருந்து நிலையத்திலிருந்து இன்று காலை கேரள மாநிலம்  திருவனந்தபுரத்திற்கு கேரளா மாநில அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது இந்த பேருந்து புளியரை அருகே உள்ள ஆரியங்காவில் அமைந்துள்ள மதுவிலக்கு சோதனை சாவடியில் போலீசார் நிறுத்தி சோதனை செய்த பொழுது பேருந்தில் 2 கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டு, அதனை கொண்டு சென்ற அஞ்சல் பகுதியைச் சேர்ந்த சஜு என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

Similar News

News January 25, 2026

தென்காசி: NAVY-ல் ரூ.1,25,000 சம்பளத்தில் வேலை., NO EXAM!

image

இந்திய கப்பல் படையில் காலியாக உள்ள 260 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியது. B.E/B.Tech, B.Sc, B.Com படித்தவர்கள், திருமணமாகாத ஆண், பெண் இருபாலரும் பிப். 24க்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.1,25,000 வழங்கப்படும். தேர்வு இல்லை. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். மேலும் விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு க்ளிக்<<>> செய்யவும். இந்த தகவலை SHARE IT.

News January 25, 2026

தென்காசி: கட்டடத்தில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு

image

கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த வெல்டிங் தொழிலாளி சுடலைமுத்து (55). இவர் கடந்த 13ம் தேதி கடையநல்லூர் இந்திரா நகர் பகுதியில் பணியில் இருந்தபோது கட்டடத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். காயமடைந்த அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

News January 25, 2026

ஆலங்குளம் அருகே திமுக நிர்வாகி கைது!

image

ஆலங்குளம் பகுதியை சேர்ந்த திமுக பொதுக்குழு உறுப்பினர் கதிர்வேல் முருகன் (52). இவருக்கும் சில்வார்குளம் பகுதியில் செயல்படும் காற்றாலை நிறுவனத்திற்கும் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் காற்றாலை மேலாளர் பாலாஜிக்கும், கதிர்வேலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கதிர்வேல், பாலஜியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீசார் கதிர்வேலை கைது செய்தனர்.

error: Content is protected !!