News October 8, 2024
தென்காசி எம்பி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்

சுரண்டை பகுதியில் நாளை தென்காசி எம்பி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார் என தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாளை மாலை 4 மணிக்கு சுரண்டை பகுதியில் தென்காசி எம்பி டாக்டர் ராணி ஸ்ரீ குமார் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார் என்றார்.
Similar News
News November 15, 2025
தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள்

தென்காசி, ஆலங்குளம், புளியங்குடி,சங்கரன்கோவில்) பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (14-11-25) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100க்கு அழைக்கவும்.
News November 14, 2025
தென்காசி: யானைகளை கட்டுப்படுத்த குழு

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார வெளியேறும் காட்டு யானைகளை கட்டுப்படுத்த யானை தோழர்கள் என்ற குழு உருவாக்கப்படுகிறது ஒவ்வொரு வன சரகத்தில் அதிகபட்சமாக நாலு நபர்கள் கொண்ட யானை தோழர்கள் குழு அமைக்கப்படும் குழு உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகை வனக்குழு தீர்மானத்தின் அடிப்படையில் வழங்கப்படும் என்று வன அலுவலர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
News November 14, 2025
புதிதாக பொறுப்பேற்றுள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்!

தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாக கருப்பண்ண ராஜவேல் பொறுப்பேற்பு தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியில் இருந்த எடிசன் மாற்றப்பட்ட நிலையில் ஏற்கனவே செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியில் இருந்த கருப்பண்ண ராஜவேல் நவம்பர்-14ஆம் தேதி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். மரியாதை நிமித்தமாக மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளை சந்தித்து வாழ்த்து பெற்றார்.


